Friday 17th of May 2024 01:15:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமைச்சர்களின் ஓகஸ்ட் மாதச் சம்பளம் கொவிட் நிவாரண நிதியத்துக்கு!

அமைச்சர்களின் ஓகஸ்ட் மாதச் சம்பளம் கொவிட் நிவாரண நிதியத்துக்கு!


இலங்கை அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தினை இடுகம கொவிட் நிவாரண நிதியத்துக்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு அனைத்து அமைச்சர்களும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் கொவிட் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்காக பாரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அமைய அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தமது ஆகஸ்ட் மாத வேதனத்தை கொவிட் நிவாரண நிதிக்காக செலுத்தி நாட்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத வேதனங்களும் கெவிட் நிவாரண நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE